ஜனாதிபதியின் சிறப்பான தலைமைத்துவத்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு வீதம் குறைவடைந்துள்ளது: ஜீவன் தொண்டமான் (Video)

Ranil Wickremesinghe Sri Lanka President of Sri lanka Jeevan Thondaman
By Thirumal Mar 01, 2023 12:08 PM GMT
Report

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான தலைமைத்துவத்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு வீதம் குறைவடைந்துள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பராமரிக்கப்படும் சிறுவர்களுக்கு இலவசமாகச் சத்துணவு வழங்கும் வேலைத்திட்டம் ஜீவன் தொண்டமான் தலைமையில் இன்றைய தினம் (01.03.2023) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ராமேஷ்வரனின் பங்குபற்றலோடு, பூண்டுலோயா பேர்லன்ஸ் தோட்டத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றுள்ளது.


இதன்போத அமைச்சர் ஜீவன் தொண்டமான் காணொளி மூலமாக நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து உரையாற்றியுள்ளார்.

அவர் கூறியவை வருமாறு, மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள ஆயிரத்து 300 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உள்ள சுமார் 23 ஆயிரம் சிறார்களை இலக்கு வைத்து எமது அமைச்சின் கீழ் சத்துணவு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

இதற்கமைய ஒரு வயது முதல் 5 வயது வரையான சிறார்களுக்கு இலவசமாகக் காலையில் சத்துணவு வழங்கப்படும். மலையக சிறார்கள் மத்தியில் போஷாக்கின்மை பிரச்சினை காணப்படுகின்றது. அதற்கானதொரு தீர்வாகவே இத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.

2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதமளவில் நாட்டில் உணவு தட்டுப்பாடு 64.4 வீதமாகக் காணப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் சிறப்பான தலைமைத்துவத்தால் தற்போது அது 60.1 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

ஜனாதிபதியின் சிறப்பான தலைமைத்துவத்தால் நாட்டில் உணவு தட்டுப்பாடு வீதம் குறைவடைந்துள்ளது: ஜீவன் தொண்டமான் (Video) | Under The Excellent Leadership Of Ranil

மக்களின் சார்பில் நன்றிகள்

அத்துடன், 57.4 வீதமாகக் காணப்பட்ட பணவீக்கமும் 54.4. வீதமாகக் குறைவடைந்துள்ளது. இதனால் எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

உணவு பணவீக்கம் அதிகரிப்பு மலையக மக்களுக்குப் பெரும் பாதிப்பாக அமைந்தது. எனவே, இத்திட்டம் அவர்களுக்குச் சிறு ஆறுதலை வழங்கும் என நம்புகின்றோம்.

சத்துணவு வேலைத்திட்டம் ஆறு மாதங்களுக்கானது எனக் கூறப்பட்டாலும் அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கே நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான திட்டங்கள் நிச்சயம் உருவாக்கப்படும்.

இந்த சத்துணவு வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு உதவியளித்த உலக வங்கி மற்றும் மகளிர் விவகார மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சு ஆகியவற்றுக்கு மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

6 மாதங்களுக்கே இத்திட்டம் எனக் கூறப்பட்டாலும், அதனை நிரந்தரமாக்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்படும். இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனுமதி அளித்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிர்வாக ஒத்துழைப்பை வழங்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் மலையக மக்களின் சார்பில் நன்றிகள்" எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US