சர்வதேச நாணய நிதிய பரிந்துரைகளின் கீழ் இரண்டு யோசனைகள் இன்று நாடாளுமன்றில்
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய சட்டமூலங்களை இன்று (22.05.2024) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தவுள்ளதாக பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க (Shehan Semasinghe) அறிவித்துள்ளார்
"பொருளாதார மாற்ற யோசனை" மற்றும் "பொது நிதி மேலாண்மை யோசனை" என்பனவே அவையாகும்.
பொது நிதி நிர்வாகத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் எதிர்கால பொருளாதார வீழ்ச்சியிலிருந்து பாதுகாக்கவும் இந்த யோசனைகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலநிலை மாற்றம்
சர்வதேச நாணய நிதியத்துடனான கூட்டுத் திட்டத்தின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச வர்த்தகம், வர்த்தக ஒப்பந்தங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தணிக்கும் முயற்சிகளுக்கு தேவையான சீர்திருத்தங்களை இந்த சட்டயோசனைகள் உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
