பாரிய ஆபத்தில் பதுளை - கட்டுப்படுத்த முடியாத அளவு கோவிட்19 வைரஸ் பரவல்
பதுளையில் பாரியளவில் கோவிட்19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
பதுளை, ரிதீமாலியத்த கெமுனுபுர தொழிற்சலையில் 2300 ஊழியர்கள் பணியாற்றும் நிலையில் மேலும் 202 பேர் கோவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கட்டுப்படுத்த முடியாத அளவில் பதுளை மாவட்டத்தினுள் கோவிட் வைரஸ் தொற்று பரவும் ஆபத்து உள்ளதாக சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அதற்கமைய இதுவரையில் அந்த தொழிற்சாலையில் 597 பேருக்கு கோவிட் தொற்றியுள்ளதாக குறிப்பிடபப்டுகின்றது.
இதற்கு மேலதிகமாக தொற்றாளர்களுடன் நெருங்கி செயற்பட்ட குடும்பத்தினர் 16 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை மஹியங்கனை ஆடை தொழிற்சாலை ஒன்றில் இதுவரையில் கோவிட் தொற்றுக்குள்ளான 115 பேர் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
“பதுளை மாவட்டத்தினுள் கோவிட் தொற்றாளர்கள் சமூக பரவலாக அடையாளம் காணப்படுவதனை அவதானிக்க முடிகின்றது. எப்படியெல்லாம் தரவுகளை மறைத்தாலும் சுகாதார கட்டமைப்பு தனது எல்லையை நெருங்கியுள்ளது. சுகாதார ஊழியர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படும்” என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஆதிரை மட்டும் ஸ்பெஷலா.. எலிமினேஷனுக்கு பின் பிக் பாஸ் செய்த விஷயம்! கடுப்பான விஜய் சேதுபதி Cineulagam
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
கணவரை பிரிந்த நிலையில் ஹன்சிகா எங்கே சென்றிருக்கிறார் பாருங்க.. அதுவும் யாருடன் தெரியுமா? Cineulagam