மன்னாரில் முன் அறிவித்தல் இன்றி நீர் விநியோகத்தடை: மக்கள் பெரும் அசௌகரியம்
மன்னார்(Mannar) தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை ஊடாக விநியோகிக்கப்பட்டு வரும் குழாய் நீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தல் இன்றி தடைப்பட்டுள்ளமையினால் மன்னார் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
குறித்த பகுதியில் நேற்று (26.05.2024) மாலை முதல் குழாய் நீர் விநியோகிக்கமானது தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக அந்த பகுதி மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறப்படுகின்றது.
நீர் விநியோகம் தடை
மன்னார் நகர பகுதியில் உள்ள அதிகமான மக்கள் தமது வீடுகளுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் குழாய் நீர் இணைப்பை பெற்று தமது குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.
அண்மை காலமாக குழாய் நீர் விநியோகம் தடை ஏற்படும் பச்சத்தில் முன் அறிவித்தல் வழங்கப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் (26) எவ்வித அறிவித்தலும் இன்றி நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கான பொறியியலாளர் ஒருவர் நிரந்தரமாக இல்லாத நிலையில் பல்வேறு பிரச்சினைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரியவருகிறது.
மேலும்,மன்னார் - சின்னக்கடை பிரதான வீதியில் நீர் குழாயில் ஏற்பட்டுள்ள பாரிய நீர் கசிவை சீர் செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்ற நிலையிலேயே நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 21 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

மௌன ராகம் சீரியலில் நடித்த இந்த சிறுமியை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க Cineulagam

Super Singer: சூப்பர் சிங்கரில் நடுவர் கொடுத்த இன்ப அதிர்ச்சி... யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைத்தது? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam
