இந்திய அரச ஆவணங்களை போலியாக தயாரித்த இலங்கையர் கைது
இந்தியாவின்(India) பெங்களூர், ராச்சேனஹள்ளியில் போலியான இந்திய அரச ஆவணங்களை தயாரித்ததாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டினர் சட்டம், ஆயுதச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கையர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாக மத்திய குற்றப்பிரிவு துறையினர் அறிவித்துள்ளனர்.
சட்டவிரோதத் தொழில்
குறித்த இலங்கையர், 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் சென்னைக்கு(Chennai) இடம்பெயர்ந்துள்ளதுடன் அங்கு, அவர் போலியான இந்திய அரச ஆவணங்களைத் தயாரிக்கும் தனது சட்டவிரோதத் தொழிலை ஆரம்பித்துள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சரன் குமார் காளிதாஸ் என்ற உமேஸ் பாலா ரவீந்திரன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பெங்களூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அவரது குடியிருப்பில் இருந்து ஒரு நாட்டுத் துப்பாக்கி, பல கையடக்கத் தொலைபேசிகள் உட்பட்ட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam