ரணில் மீது மக்கள் பெரும் நம்பிக்கை: செல்வம் அடைக்கலநாதன் சுட்டிக்காட்டு
முல்லைத்தீவு(Mullaitivu) மாவட்ட மக்களின் பிரச்சனைகளை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) முன்னிலையில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(Selvam Adaikalanathan) தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - புதுக்குடியிப்பு மகாவித்தியாலயத்தில் இன்று (26.05.2024) இடம்பெற்ற உறுமய காணி உரித்து வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களின் பிரச்சினை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்திற்கு ஜனாதிபதி வருகை தந்தையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன்.
இந்த மாவட்டத்தில் பல பிரச்சனைகள் உள்ளன. அவற்றை உங்களால் தான் தீர்த்து வைக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் இருக்கிறது.
இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுவை உங்கள் தலைமையில் நடத்தி முல்லைத்தீவு மாவட்ட மக்களின் காணி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க வேண்டும்.
காணி உறுதியில்லாத மேலும் பலர் உள்ளனர். சொந்த இடங்களுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
இந்த நிலையில், எமது மக்களின் அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

கூலி படத்தில் வெறித்தனமான வில்லனாக நடிக்க சௌபின் சாஹிர் வாங்கிய சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
