சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் ஏகமனதாக நிறைவேற்றம்
இலங்கை நீதித்துறையின் சிவில் மற்றும் குற்றவியல் சட்டங்கள் தொடர்பான திருத்தச்சட்டங்கள் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாமலே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திருத்தப்பட்ட 1979ம் ஆண்டின் 15வது சரத்துடைய குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் இதுவரை காலமும் எந்தவொரு குற்றவாளியும்,சம்பவம் நடக்கும் போது 18 வயதைப் பூர்த்தி செய்யாதவராக இருக்கும் பட்சத்தில் அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்க முடியாதவாறு சட்டவிதிகள் இருந்தன.
ஆனால் குறித்த தண்டனைக் கோவை சட்டம் திருத்தப்பட்டுள்ளதுடன் 53வது பிரிவின் பிரகாரம் நீதிமன்றம் அவர்களுக்கான தண்டனை வழங்கும் வகையில் இந்தத் திருத்தம் முன்வைக்கப்பட்டுள்ளது.

சிவில் வழக்குகள் தொடர்பான சட்டம் திருத்தம்
அத்துடன் இனி வரும் காலங்களில் தொழிலாளர் வழக்குகளை விசாரிக்கும் தொழில்சபையின் தலைவர் மேலதிக மாஜிஸ்திரேட் நீதிபதியின் அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் சிவில் வழக்குகள் தொடர்பான சட்டமும் திருத்தப்பட்டுள்ளது.
மேற்குறித்த திருத்தச் சட்டங்களை நீதி மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் முன்வைத்திருந்தார்.
எதிர்க்கட்சியினரும் திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்த காரணத்தினால் சட்டமூலங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமலே நிறைவேற்றப்பட்டுள்ளன.
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
காமெனியின் படுகொலை... உலகம் மொத்தம் பீதியை ஏற்படுத்திய ஈரானிய மூத்த மதகுருவின் அழைப்பு News Lankasri