நிலக்கரி கப்பல்களுக்கு கட்டணங்களை செலுத்த முடியவில்லை:அனல் மின் உற்பத்தி பாதிக்கப்படலாம்
ஒரு லட்சத்து 20 ஆயிரம் மெற்றி தொன் நிலக்கரியை ஏற்றிய இரண்டு கப்பல்களுக்கான கட்டணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், அந்த கப்பல்கள் திரும்பி செல்லும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி இலங்கையை இந்த கப்பல்கள் வந்தடைந்தன. இந்த கப்பல்களுக்கு 34 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட வேண்டியுள்ளது.
அந்த பணத்தை செலுத்த முடியாத காரணத்தினால், அந்த கப்பல்கள் கடந்த 7 நாட்களாக இலங்கை எல்லையில் நங்கூரமிடப்பட்டுள்ளன.
இந்த நிலக்கரி தொகை இறக்க முடியாது போனால், நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தில் மின்னை உற்பத்தி செய்வதில் தடையேற்படும் எனவும் இதனால், தொடர்ந்தும் மின் விநியோகத்தை துண்டிக்க நேரிடும் எனவும் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.





பளார் விழுந்த அடி, வேறொரு பிளானில் அறிவுக்கரசி, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
