சஜித்தை அவசரமாகச் சந்தித்த ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி!
இலங்கைக்கான ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி ஹனா சிங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோருக்கிடையில் விசேட சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இலங்கையில் கோவிட் பரவல் தீவிரமடைந்து வருவதும் அதனூடாக நாடு எதிர்கொண்டுள்ள சவால்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பில் ஐ.நா. ஒத்துழைக்க வேண்டும் என்றும் சந்திப்பின்போது எதிர்க்கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தாம் இலங்கைக்கு அனைத்து விதமான ஒத்துழைப்புகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக ஐ.நா. வதிவிட பிரதிநிதி ஹனா சிங்கர் தெரிவித்துள்ளார்.
கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் கட்சி பேதம் இன்றி அரசுக்குத் தாம் ஒத்துழைப்பதாகவும், ஐக்கிய மக்கள் சக்தி கோவிட் விடயத்தில் அரசியல் செய்யாது என்றும் சஜித் பிரேமதாஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.






சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
