இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம்! அணுகுமுறையை மாற்ற தயாராகும் அரசாங்கம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி எதுவும் செய்ய முடியாது என்று தேசிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த முன்மொழிவுக்கு அரசாங்கத்தின் எதிர்ப்பு குறித்து இலங்கை எடுத்த நிலைப்பாடு முந்தைய அரசாங்கங்கள் எடுத்த நிலைப்பாட்டிலிருந்து வேறுபட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நாட்டிற்குள்ளேயே தீர்வு காணும் நோக்கில் தனது அரசாங்கம் ஒரு புதிய அணுகுமுறையை எடுத்துள்ளதாகவும் ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.
இராஜதந்திர உறவு
மேலும், இது இராஜதந்திர உறவுகள் தொடர்பான பிரச்சினை அல்ல என்றும், புதிய அரசாங்கமாக இந்தப் புதிய அணுகுமுறை எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பயணம் செய்த போதிலும், ஜனாதிபதியால் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லையா என தென்னிலைங்கை ஊடக நிகழ்ச்சியில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும்போதே இதனை கூறியுள்ளார்.




