காணாமல்போன குடும்பஸ்தர் ஆற்றிலிருந்து சடலமாக மீட்பு!
புதிய இணைப்பு
காணாமல்போன குடும்பஸ்தர் ஒருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி, ஹினிதும பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்கல்ல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்தே இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
தலங்கல்ல பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 47 வயதுடைய நபரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் மீட்பு
இவர் கடந்த 10 ஆம் திகதி தனது காணிக்குச் செல்வதாகக் கூறி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ள நிலையில் மீண்டும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனால் அவரது குடும்பத்தினர் இது தொடர்பில் ஹினிதும பொலிஸ் நிலையத்தில் நேற்று (11) காலை முறைப்பாடு அளித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையில் காணாமல்போனவர் மல்கல்ல பிரதேசத்தில் உள்ள ஆற்றில் இருந்து நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
முதலாம் இணைப்பு
ஆற்றில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பெந்தர ஆற்றில் மிதந்த நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று அளுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.
தகவல்கள்..
45 வயது மதிக்கத்தக்க ஆணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அளுத்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |