ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில் இலங்கைக் குழு பங்கேற்காது - கெஹலிய
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2021 ஆம் ஆண்டு அமர்வில் இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ குழு பங்கேற்காது என அமைச்சரவை பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்
தமக்கு தெரிந்தளவில் இதுவரை வெளியுறவு அமைச்சு, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக குழு ஒன்றை நியமிக்கவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு உரிய பதிலை இலங்கை அரசாங்கம் வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் போர்குற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை வெளியிட்ட காணொளி அதன் அடிப்படைகளுக்கு முரணானது என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இந்தத் தகவல்களை வெளியிட்டார்.
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam