இலங்கையின் மனித உரிமை நிலைமை குறித்து ஐ.நா அதிருப்தி!

Sri Lanka Michelle Bachelet UN High Commissioner for Human Rights
By Murali Feb 26, 2022 01:02 AM GMT
Report

 இலங்கையின் பல மனித உரிமைகள் மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

குடியியல் இடம் மற்றும் சுதந்திரமான நிறுவனங்களை உறுதிசெய்து, தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே இலங்கை நிலையான வளர்ச்சி, அமைதி மற்றும் நீடித்த நல்லிணக்கத்தை அடையும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட அண்மைக்கால நடவடிக்கைகளை பச்லெட் அங்கீகரித்துள்ளார்.

எனினும் தேவையான சட்ட, நிறுவன மற்றும் பாதுகாப்புத் துறையில், சர்வதேச மனித உரிமைக் கடமைகளுக்கு இணங்க மேலும் சீர்திருத்தங்களுக்கு செல்லுமாறு அவர் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களின் தொடர்ச்சியான ஆபத்தான நிலைமையை எதிர்நோக்குகின்றனர். பெண்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அவர்களின் துன்பங்களை உணர்ந்து, அவசரமாகத் தீர்மானிக்கவும், இழப்பீடு வழங்கவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

ஜனநாயக நிறுவனங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும், சிறுபான்மையினரின் இடர்களை அதிகரிக்கும் மற்றும் நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் இராணுவமயமாக்கல் மற்றும் இன-மத தேசியவாதத்திற்கான தொடர்ச்சியான போக்குகள் இடம்பெறுகின்றன.

குறிப்பாக வடக்கு கிழக்கில் குடியியல் சமூக அமைப்புகள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினரின் கண்காணிப்பு மற்றும் துன்புறுத்தல்கள் தொடர்கின்றன.

2022 பெப்ரவரி 10ம் திகதியன்று இலங்கையின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத திருத்தச் சட்டமூலம் ஒரு முக்கியமான ஆரம்ப நடவடிக்கையாகும். இதில், தடுப்புக்காவல் இடங்களுக்குச் செல்வதற்கான நீதிவான்களின் அதிகாரங்கள் அதிகரிக்கப்படுவதை உயர் ஸ்தானிகர் வரவேற்றுள்ளார்.

எனினும், முன்மொழியப்பட்ட ஏனைய திருத்தங்கள் இலங்கையின் சர்வதேச மனித உரிமைக் கடமைகளுடன் முழுமையாக இணங்கவில்லை. அத்துடன் பயங்கரவாத தடைச் சட்டத்தின் மிகவும் சிக்கலான விதிகள் திருத்தப்படவில்லை.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள 80க்கும் மேற்பட்டவர்கள், ஜூன் மாதம் முதல் விடுவிக்கப்பட்டதை வரவேற்கின்ற அதேவேளை, சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கு தடை விதிக்குமாறு  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.

மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US