ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருடன் நீதியமைச்சர் சந்திப்பு
ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் நீதி, தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கு இடையில் சந்திபொன்று கொழும்பில் நடைபெற்றுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் நேற்றைய தினம் (24) நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கலந்துரையாடப்பட்ட விடயங்கள்
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்த விபரங்கள் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
இந்த சந்திப்பில் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்டதரணி முர்து பெர்ணாந்து, சட்டமா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி நெரின் புள்ளே, இலங்கையில் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் மற்றும் ஐ.நா. அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |