இலங்கை தொடர்பில் ஐ.நாவிடம் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆதாரங்கள்

United Nations Sri Lankan Tamils Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Rakesh Oct 20, 2025 05:18 PM GMT
Report

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தில் இயங்கி வரும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தால் இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தமாக ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 348 ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.

அவற்றில் 7 ஆயிரத்து 459 ஆவணங்கள் திறந்த மூலங்களில் இருந்து கிடைக்கப் பெற்றவையும், ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 889 ஆவணங்கள் இரகசிய மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையும் ஆகும்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் மிகப்பாதுகாப்பான டிஜிட்டல் ஆதாரத் திரட்சிக் கட்டமைப்பின் ஊடாகப் பேணப்படுவதாகவும், இவற்றில் மீறல்களுக்கான பொறுப்பாளிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாகவும் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் 'இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்' எனும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

உரிமை மீறல்கள்

இந்தச் செயற்றிட்டத்தின் ஓரங்கமாக இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டு, உரியவாறு மதிப்பீடு செய்யப்பட்டு, சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழான வழக்குத் தொடரல் தேவைப்பாடுகளுக்காக உரியவாறு களஞ்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை தொடர்பில் ஐ.நாவிடம் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் | Un Has One Hundred Thousand Documents Sri Lanka

அதன்படி இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின்கீழ் இயங்கும் ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் கடந்த செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரையான காலப் பகுதியில் ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 348 ஆவணங்கள் திரட்டப்பட்டுள்ளன.

இவற்றில் 78 ஆயிரத்து 151 ஆவணங்கள் இலங்கை தொடர்பான ஐ.நாவின் முன்னைய விசாரணை அறிக்கைகளில் இருந்தும், 34 ஆயிரத்து 197 ஆவணங்கள் இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தினாலும் திரட்டப்பட்டவையாகும்.

மேற்குறிப்பிட்ட ஆவணங்களில் மீறல்கள் பற்றிய தகவல்கள், ஆதாரங்கள், சிவில் அமைப்புக்களின் அறிக்கைகள், நேர்காணல்கள், அறிக்கைகள், காணொளிகள், புகைப்படங்கள் என்பன உள்ளடங்குகின்றன.

அதேவேளை செப்டெம்பர் மாதம் வரையில் திரட்டப்பட்டுள்ள ஒரு இலட்சத்தது 12 ஆயிரத்து 348 ஆவணங்களில் 7 ஆயிரத்து 459 ஆவணங்கள் திறந்த மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையாகவும், ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 889 ஆவணங்கள் இரகசிய மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்றவையாகும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

பல்வேறு தரவுகள் 

அத்தோடு இரகசிய மூலங்களில் இருந்து கிடைக்கப்பெற்ற ஒரு இலட்சத்து 4 ஆயிரத்து 889 ஆவணங்களில் 0.5 சதவீதமானவை நேர்காணல்கள் மற்றும் சாட்சியங்களின் வாக்குமூலங்களும், 1.3 சதவீதமானவை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெற்ற தரவுகளும், 1.9 சதவீதமானவை நீதிமன்ற ஆவணங்களும், 23.2 சதவீதமானவை சம்பந்தப்பட்ட தரப்பினரிடமிருந்து பெற்ற அறிக்கைகளும், 27.6 சதவீதமானவை மின்னஞ்சல், கடிதங்கள், கூட்ட அறிக்கைகள் உள்ளிட்ட ஏனையவையும், 45.5 சதவீதமானவை பாதிக்கப்பட்ட தரப்பினரால் சமர்ப்பிக்கப்பட்டவையும் ஆகும்.

இலங்கை தொடர்பில் ஐ.நாவிடம் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட ஆதாரங்கள் | Un Has One Hundred Thousand Documents Sri Lanka

அதேபோன்று ஆதாரங்களைத் திரட்டும் செயன்முறை வசமுள்ள ஆவணங்களில் 37 ஆயிரத்து 905 ஆவணங்கள் சட்டவிரோத படுகொலைகள் தொடர்பானவையும், 48 ஆயிரத்து 70 ஆவணங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள் தொடர்பானவையும், 32 ஆயிரத்து 99 ஆவணங்கள் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறல்கள் தொடர்பானவையும், 9 ஆயிரத்து 163 ஆவணங்கள் சிறுவர்களுக்கு எதிரான மிகப்பாரதூரமான மீறல்கள் தொடர்பானவையும், 26 ஆயிரத்து 185 ஆவணங்கள் சித்திரவதைகள் தொடர்பானவையும் ஆகும்.

இந்த ஆவணங்கள் அனைத்தும் மிகப்பாதுகாப்பான டிஜிட்டல் ஆதாரத்திரட்சிக் கட்டமைப்பின் ஊடாகப் பேணப்படுவதாக இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் தெரிவித்துள்ளது.

அதுமாத்திரமன்றி இந்த ஆவணக்களஞ்சியம் பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதாக அமைந்திருப்பதாகவும், மீறல்களுக்கான பொறுப்பாளிகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருப்பதாகவும் அந்தச் செயற்றிட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

மரண அறிவித்தல்

காரைநகர், வெள்ளவத்தை

18 Oct, 2025
அகாலமரணம்

கொக்குவில், Zürich, Switzerland

16 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், முல்லைத்தீவு, வவுனியா

21 Oct, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, வவுனியா

03 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
மரண அறிவித்தல்

சில்லாலை, யாழ்ப்பாணம், Wassenberg, Germany, Markham, Canada

16 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarbrough, Canada

19 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

Trichy, British Indian Ocean Terr., கம்பளை

27 Oct, 2019
38ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு, நல்லூர்

16 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, பேராதனை, கொழும்பு, Fredericton, Canada, Toronto, Canada

08 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

19 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Altendorf, Switzerland

19 Oct, 2024
38ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
மரண அறிவித்தல்

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US