இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்கு-நிதி ஒதுக்கிய ஐ.நாவின் நிதிக்குழு
போர் குற்றங்களை எதிர்நோக்கும் இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குகளை தொடர ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்தாவது நிதிக்குழு 2033 ஆம் ஆண்டுக்காக 3.4 மில்லியன் டொலர்களை ஒதுக்க அனுமதி வழங்கியுள்ளது.
நிதி ஒதுக்கீட்டை எதிர்க்கும் இலங்கை அரசு
இந்த தொகையானது இலங்கை ரூபா மதிப்பில் 1.2 பில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்தாவது நிதிக்குழு, ஜெனிவா மனித உரிமை பேரவைக்கே இந்த நிதியை ஒதுக்கியுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியாக டொலர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி இருக்கும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய நாடுகளின் உறுப்பு நாடான இலங்கைக்கு தண்டனை வழங்க பெருந்தொகை டொலர்களை ஒதுக்கி இருப்பது இதுவே முதல் முறை என சிங்கள வாரப்பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறானும் இந்த நிதி ஒதுக்கீட்டை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளதுடன் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஐந்தாவது நிதிக்குழுவின் கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கை பிரதிநிதி, உறுப்பு நாடு ஒன்றை தண்டிக்க நிதியை ஒதுக்குவது ஐ.நா அமைப்பின் கொள்கை அதிகாரத்தை மீறிச் செல்லும் நடவடிக்கை என கூறியுள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam
