மத்திய கிழக்கு மோதல் "கட்டுப்பாட்டை மீறிவிட்டது: ஐநா பொதுச்செயலாளர்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் தற்போது "கட்டுப்பாட்டை மீறி" சென்றுவிட்டதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச்செயலாளர் அன்டானியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார்.
உலகம் ஒரு மிகப்பெரிய போரின் விளிம்பில் நின்று கொண்டிருப்பதாக அவர் மிகவும் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
ஈரான் மீதான போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய "உகந்த நேரம் இது" என்று குட்டெரெஸ் வலியுறுத்தினார்.

போரினால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளை கருத்தில் கொண்டு உடனடியாக தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த மோதலில் தொடர்பில்லாத அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இது மோதல்களைத் தீவிரப்படுத்தும் முனைப்புக்களில் ஈடுபடுவதற்கு நேரமல்ல; மாறாக, ராஜதந்திரப் பாதையில் (Diplomatic ladder) பயணிக்க வேண்டிய நேரம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச சட்டங்களுக்கு முழுமையான மதிப்பளித்து, அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அனைத்து நாடுகளும் திரும்ப வேண்டும்," என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பது உலக நாடுகளின் எரிபொருள் மற்றும் உர விநியோகத்தைப் பாதித்துள்ளதாகவும், இது உலகளாவிய பொருளாதார நெருக்கடியை உருவாக்கும் என குட்டெரஸ் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.