மூன்றாம் உலகப்போர் தொடர்பில் ரஷ்யா எச்சரிக்கை! ஐக்கிய நாடுகளின் செயலாளர் ரஷ்ய ஜனாதிபதியை சந்திப்பு!
ஐக்கிய நாடுகளின் செயலாளர் என்டனியோ குட்டரஸ் இன்று ரஸ்ஷாவின் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை சந்திக்கவுள்ளார்.
எனினும் இந்த சந்திப்பின் எதிர்பார்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியபுல் நகரை கைப்பற்றியதாக ரஷ்யா கூறிவருகின்ற போதும், அங்கு இரும்பு ஆலையை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதில் ரஷ்யா தோல்வியடைந்துள்ளது.
இந்தநிலையில் ஆலையில் தங்கியிருக்கும் பொதுமக்களின் பாதுகாப்பான வெளியேற்றம் குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளருக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் ரஷ்யாவுடன் பேசுமாறு ஏற்கனவே உக்ரைன், ஐக்கிய நாடுகளின் செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை இன்று ரஷ்ய ஜனாதிபதியை இன்று சந்திக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாளை மறுதினம் வியாழக்கிழமையன்று உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கியை சந்திக்கவுள்ளார்.
இதற்கிடையில் உக்ரைன் பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொய்ட் ஒஸ்டின் இன்று பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்துகிறார் இந்த சந்திப்பு ஜேர்மனியில் இடம்பெறுகிறது..
இந்தநிலையில் உக்ரைனின் இந்த செயற்பாடுகள், மூன்றாவது உலகப்போருக்கு வழிவகுக்கும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது.