கொடூரமாக தாக்கப்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள்.. அநுர அரசிற்கு ஐநாவின் கடும் எச்சரிக்கை

United Nations Government Of Sri Lanka Sri Lanka Final War
By Sajithra Nov 26, 2026 12:12 PM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற ஆயுத மோதலின் போது மனிதாபிமான மற்றும் மருத்துவப் பணியாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டு, பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் (OHCHR) வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழுமையான இழப்பீடுகளை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

I Died Many Times: Attacks on Humanitarian Assistance in Sri Lanka, 20 Years On என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள 40 பக்கங்களைக் கொண்ட ஐநாவின் புதிய அறிக்கையில், போரின் போது இடம்பெற்ற பாரிய சர்வதேச சட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறல் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்கங்கள் கண்டுகொள்ளாமை 

குறிப்பாக 2006 முதல் 2009 மே வரையிலான காலப்பகுதியில் மனிதாபிமானப் பணியாளர்கள், வைத்தியசாலைகள் மற்றும் நிவாரணப் பணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தற்செயலானவை அல்ல எனவும், அவை திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான தாக்குதல்களின் ஒரு பகுதி எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொடூரமாக தாக்கப்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள்.. அநுர அரசிற்கு ஐநாவின் கடும் எச்சரிக்கை | Un Calls Sri Lanka Apologise Attacks Aid Workers

Human Rights Watch இலங்கை இராணுவம், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஏனைய ஆயுதக் குழுக்கள் சம்பந்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து நம்பகத்தன்மையுடன் விசாரணை நடத்தவோ அல்லது வழக்குத் தொடரவோ அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் தவறிவிட்டதாக இவ்வறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2006 ஜனவரியில் தமிழர் புனர்வாழ்வுக் கழக (TRO) பணியாளர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை, 2006 ஓகஸ்டில் மூதூரில் 'அக்ஷன் கான்ட்ரே லா ஃபெய்ம்' (ACF) நிறுவனத்தின் 17 மனிதாபிமானப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை, 2009 ஜனவரியில் ஐ.நா மனிதாபிமான வாகனத் தொடரணி மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுத் தடுக்கப்பட்டமை மற்றும் 2009 இல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீது எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டமை ஆகிய நான்கு பிரதான சம்பவங்கள் குறித்து இவ்வறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.

அரசியலுக்கு வருவது தொடர்பில் மகிந்தவின் இளைய மகன் ரோஹித பகிரங்க அறிவிப்பு

அரசியலுக்கு வருவது தொடர்பில் மகிந்தவின் இளைய மகன் ரோஹித பகிரங்க அறிவிப்பு

பின்னணிச் சரிபார்ப்புகள் 

இந்நான்கு சம்பவங்களிலும் இதுவரை எவரும் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டுத் தண்டிக்கப்படவில்லை என ஐ.நா தெரிவித்துள்ளது.

அரசாங்கம் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினரும் விதித்த கட்டுப்பாடுகள் மனிதாபிமானப் பணிகளைப் பலவீனப்படுத்தி, பொதுமக்களின் துயரங்களை அதிகரித்ததாகவும், அதேவேளை பொதுமக்களைப் பாதுகாப்பதிலும் ஆரம்பகட்ட எச்சரிக்கைகளுக்குப் பதிலளிப்பதிலும் ஐ.நா சபையும் தனது நிறுவன ரீதியான தோல்விகளைச் சந்தித்ததாகவும் ஐநாவின் அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது.

கொடூரமாக தாக்கப்பட்ட மனிதாபிமானப் பணியாளர்கள்.. அநுர அரசிற்கு ஐநாவின் கடும் எச்சரிக்கை | Un Calls Sri Lanka Apologise Attacks Aid Workers

பகிரங்க மன்னிப்பு மற்றும் இழப்பீடு வழங்குதல், சுயாதீன வழக்குத் தொடுநர் பொறிமுறையை நிறுவுதல், தாக்குதல்கள் ஒரு பரந்த கொள்கையின் கீழ் நடத்தப்பட்டனவா என விசாரித்தல், போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை உள்நாட்டுச் சட்டத்தில் இணைத்தல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ரோம் சாசனத்தில் இணைதல், பாதுகாப்புத் துறையைச் சீர்திருத்தி சாட்சிகள் பாதுகாப்பை வலுப்படுத்தல் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மீதான கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல்களை நிறுத்துதல் ஆகியவற்றை ஐ.நா பரிந்துரைத்துள்ளது.

உள்ளகப் பொறுப்புக்கூறல் முயற்சிகள் போதியளவில் இல்லாவிடின், சர்வதேச விசாரணைகள், வழக்குத் தொடரல்கள், இலக்கு வைக்கப்பட்ட தடைகள் மற்றும் இலங்கைப் பாதுகாப்புப் படையினருக்கான மனித உரிமைகள் பின்னணிச் சரிபார்ப்புகளை முன்னெடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் 2026 செப்டம்பர் 24 அன்று இலங்கை அரசாங்கத்திற்கு 27 கேள்விகள் அனுப்பப்பட்டதுடன், நவம்பர் 3 அன்று அறிக்கையின் முன்கூட்டிய பிரதியும் பகிரப்பட்டுக் கருத்துக்கள் கோரப்பட்ட போதிலும், அறிக்கை வெளியிடப்படும் வரை அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.

மாயமாகியுள்ள 384 மில்லியன் ரூபா பணம்.. சாய்ந்தமருது கூட்டுறவுச் சங்கம் குறித்து தீவிர விசாரணை

மாயமாகியுள்ள 384 மில்லியன் ரூபா பணம்.. சாய்ந்தமருது கூட்டுறவுச் சங்கம் குறித்து தீவிர விசாரணை

2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Toronto, Canada

27 Nov, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அம்பனை, Tours, France, Catford, United Kingdom

17 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், சங்கானை, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம்

27 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் பாலாவோடை, வவுனியா

27 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US