காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா கோரிக்கை: உயர்மட்டக் கலந்துரையாடல்

United Nations Sri Lanka Politician Sri Lankan Peoples
By Theepan Mar 25, 2026 09:31 AM GMT
Report

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் -அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த விசேட கலந்துரையாடல், ஆளுநர் செயலகத்தில் நேற்று(24.03.2026) நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, பொருளாதார அபிவிருத்தி, காணிப் பிரச்சினைகள், சுற்றாடல் மற்றும் காலநிலை மாற்றம், மீள்திறன் கொண்ட வாழ்வாதாரம் ஆகிய நான்கு பிரதான விடயங்களின் அடிப்படையில் ஆளுநர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பல்! அதிரடியாக தடுத்து நிறுத்திய IRGC

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்ற பாகிஸ்தான் கப்பல்! அதிரடியாக தடுத்து நிறுத்திய IRGC

காணி பிரச்சினை

முக்கியமாகக் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் சுட்டிக்காட்டிய ஆளுநர், கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப் பலரது காணி ஆவணங்கள் முற்றாக அழிவடைந்துள்ளன. தற்போது மக்களிடமும் காணி ஆவணங்கள் இல்லை, அரச திணைக்களங்களிடமும் அதற்கான பதிவுகள் இல்லை. இதனால் தமது காணிகளுக்கான உரித்துகளை உறுதிப்படுத்த முடியாமல் மக்கள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி மக்கள் தொடர்ச்சியாகப் பிரதேச செயலகங்கள், மாவட்டச் செயலகங்கள் மற்றும் ஆளுநர் செயலகத்துக்கும் அதிகளவில் வருகை தருகின்றனர். எனவே, அவர்களின் காணிப் பிணக்குகளைத் துரிதமாகத் தீர்த்து, உரிய காணி உரித்துகளை வழங்க வேண்டியது எமது மிக முக்கிய தேவையாகும். இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 'ஹிமிகம' (உரிமை) திட்டத்தையும் ஆரம்பித்துள்ளது,' எனத் தெரிவித்தார்.

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா கோரிக்கை: உயர்மட்டக் கலந்துரையாடல் | Un Calls For Urgent Resolutionpeople Land Disputes

அத்துடன், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் முயற்சிகளை மேம்படுத்துதல், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஒற்றைச் சாளர முறைமையை உருவாக்குதல், காணி விடுவிப்பு மற்றும் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்ப ஆதரவைப் பெறுதல், மற்றும் பசுமைக் காலநிலை நிதி போன்ற சர்வதேச நிதியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஐ.நா.வின் ஒத்துழைப்புக்கள் மாகாணத்துக்கு அவசியம் என்பதையும் ஆளுநர் வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி இழுப்பதற்கான நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர், வடக்கு மாகாணத்தின் தனித்துவமான உணர்திறன்களையும் சவால்களையும் ஆளுநர் மிகவும் நுட்பமாகக் கையாளுவதைப் பாராட்டினார்.

அண்மைய வெள்ளப் பேரிடரின்போது அரசாங்கம் மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் அர்ப்பணிப்பான சேவைகளை அவர் விதந்துரைத்தார். அரசாங்கத்தின் உதவித் திட்டங்களுக்கு சமாந்தரமாக, ஐ.நா. முகவர் அமைப்புகளான யுனிசெப் போன்றவை மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் குழுக்களை, குறிப்பாகத் தனித்து வாழும் தாய்மார், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மலையகத் தமிழ் சமூகத்தினரை இலக்காகக் கொண்டு துரித நிவாரணங்களை வழங்கியமையை அவர் சுட்டிக்காட்டினார்.

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா கோரிக்கை: உயர்மட்டக் கலந்துரையாடல் | Un Calls For Urgent Resolutionpeople Land Disputes

பொருளாதார நெருக்கடி மற்றும் உலகளாவிய நிலைமைகள் குறித்துப் பேசிய அவர், இலங்கை போன்ற நடுத்தர வருமானம் பெறும் நாடுகளுக்கான சர்வதேச நன்கொடையாளர்களின் நேரடி நிதியுதவிகள் தற்போது பெருமளவில் சுருங்கியுள்ள யதார்த்தத்தைத் தெளிவுபடுத்தினார்.

எவ்வாறாயினும், பசுமைக் காலநிலை நிதி, இழப்பு மற்றும் சேத நிதி, கடன் பரிமாற்றங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை ஈர்க்கக்கூடிய அபிவிருத்திப் பத்திரங்கள் போன்ற புதிய நிதியீட்டல் முறைகள் ஊடாக வடக்கு மாகாணத்துக்கு அதிகபட்ச உதவிகளை வழங்க ஐ.நா. தயாராகவுள்ளது எனக் குறிப்பிட்டார்.

அத்துடன், கொழும்பில் வடக்கு மாகாணத்துக்கான ஒரு தூதராக ஐ.நா. தன்னை உணர்கின்றது எனக் குறிப்பிட்ட அவர், உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் முதலீடுகளை வடக்கிற்கு ஈர்ப்பதற்குத் தொடர்ந்து குரல்கொடுப்பதாக உறுதியளித்தார். முதலீட்டாளர்களை வடக்கு மாகாணத்தை நோக்கி ஈர்ப்பதற்குத் தடையாக உள்ள கடுமையான அதிகாரத்துவ நடைமுறைகள் மற்றும் அனுமதிகளைப் பெறுவதிலுள்ள தாமதங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.

வினைத்திறனான ஒற்றைச் சாளர முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். அதேவேளை, அரசாங்கம் மற்றும் மாகாண சபைக்கு ஒதுக்கப்படும் நிதிகளைத் துரிதமாகச் செலவிடுவதற்கும், கொள்முதல் நடைமுறைகளை விரைவுபடுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் ஐ.நா. தயாராகவுள்ளது என்றார்.

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா கோரிக்கை: உயர்மட்டக் கலந்துரையாடல் | Un Calls For Urgent Resolutionpeople Land Disputes

ஆளுநரால் சுட்டிக்காட்டப்பட்ட காணி முரண்பாடுகள், காணி விடுவிப்புச் செயன்முறைகள் மற்றும் நல்லிணக்கத்தை அடிப்படையாகக் கொண்ட உட்கட்டமைப்பு வேலைத்திட்டங்களுக்கும் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளரின் உரைகளைத் தொடர்ந்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர்கள், தமது மாவட்டங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் ஆகியனவற்றுடன் தொடர்புடையதாக மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாகச் சுட்டிக்காட்டினர்.

விடுக்கப்பட வேண்டிய காண உரிமங்கள்

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும், தமது மாவட்டத்தில் நிலவும் பல்வேறுபட்ட காணிப் பிணக்குகள் தொடர்பில் தெளிவுபடுத்தினார். இறுதியாகக் கருத்துத் தெரிவித்த வடக்கு மாகாண காணி ஆணையாளர், மாகாணத்தில் சுமார் 2 இலட்சம் காணி ஆவணங்கள் கையாளப்பட வேண்டியுள்ளதைக் சுட்டிக்காட்டினார்.

தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியைக் கொண்டு, குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் இந்தப் பணியை நிறைவு செய்வதற்கு, சேவையிலீடுபடும் உத்தியோகத்தர்களுக்கு விசேட ஊக்குவிப்புக் கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்  நிர்வாகம், மாவட்டச் செயலாளர்கள், மாகாணக் காணி ஆணையாளர் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு முகவர் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஐ.நா கோரிக்கை: உயர்மட்டக் கலந்துரையாடல் | Un Calls For Urgent Resolutionpeople Land Disputes

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் வேல்நம்பி

யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் வேல்நம்பி

ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான குவைத் சர்வதேச விமான நிலையம் : பற்றி எரிந்த எரிபொருள் தாங்கி

ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளான குவைத் சர்வதேச விமான நிலையம் : பற்றி எரிந்த எரிபொருள் தாங்கி


மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US