யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தராக பதவியேற்றார் பேராசிரியர் வேல்நம்பி
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பத்தாவது துணைவேந்தராகப் சிரேஷ்ர பேராசிரியர் வேல்நம்பி பதவியேற்றுள்ளார்.
பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் விசேட அபிஷேக, ஆராதனைகளைத் தொடர்ந்து, முற்பகல் 9:30 மணிக்கு துணைவேந்தர் அலுவலகத்தில் அவர் உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு
இதன்படி இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார்.
இந்த நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் கணிதவியல் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா, கடந்த 2020 ஆம் ஆண்டிலிருந்து வகித்த துணைவேந்தர் பதவியில் இருந்து இன்றுடன் விடைபெற்றுச் சென்றுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் 2023 ஆகஸ்ட் 28 வரை தனது முதலாவது பதவிக் காலத்தையும், 2023 ஆகஸ்ட் முதல் இன்று 2026 மார்ச் 24 வரை இரண்டாவது பதவிக் காலத்திலும் துணைவேந்தராகப் பதவி வகித்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறிசற்குணராஜா நாளை மார்ச் 25 ஆம் திகதி தனது 65 ஆவது அகவையை நிறைவு செய்து 66 ஆவது அகவைக்குள் காலடி பதிக்கிறார்.
எதிர்வரும் ஆகஸ்ட் 28 திகதி வரை ஜனாதிபதியினால் இவருக்கு நியமனம் வழங்கப்பட்டிருந்த போதிலும், பல்கலைக்கழக சட்டத்தின் படி 65 வயதை நிறைவுசெய்த பின்னர் நிர்வாகப் பதவிகளை வகிப்பதற்கு இடமளிக்காததன் காரணமாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் தானாகக் கேட்டு, அடுத்த துணைவேந்தருக்கான தெரிவை உரிய காலத்தினுள் நடாத்தி, நாளை புதிய துணைவேந்தரிடம் பதவியைக் கையளிக்கவிருக்கிறார்.
எனினும், பல்கலைக்கழகச் சட்ட ஏற்பாடுகளின் படி, அவர் பணியாற்றும் விஞ்ஞான பீடத்தின் நடப்புக் கல்வியாண்டு நிறைவு பெறும் - எதிர்வரும் செப்ரெம்பர் 30 வரை அவர் தனது கல்விப் பணியில் தொடர்ந்தும் கணிதவியல் பேராசிரியராகச் சேவையாற்றுவார்.








பிக்பாஸ் புகழ் தாமரைச் செல்வியிடம் பணம், நகை வாங்கி ஏமாற்றியுள்ள சீரியல் நடிகை கணவர்... அழுதபடி அவரே வெளியிட்ட வீடியோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்க ஸ்டாலின் மற்றும் நிரோஷா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam