ஐ.நா. அலுவலகம் முன்பாக புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்
இலங்கையில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பாக புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
இலங்கையில் அமைந்துள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகராலயம் , அதன் செயற்பாடுகளை இலங்கையிலிருந்து நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது.
எனினும் அவ்வாறு நிறுத்தப்பட்டால் தற்போதைக்கு இலங்கையில் புகலிடக் கோரிக்கையாளர்களாக தங்க வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கிய அகதிகள் உள்ளிட்டோரின் நிலை கேள்விக்குறியாகிவிடும்.
பாடசாலைக் கல்வி
எனவே யூ.என்.எச்.சி. ஆர் இன் நடவடிக்கைள் இலங்கையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட முன்னதாக இலங்கைக்கு அகதிகளாக வந்துள்ளவர்களை வேறு நாடுகளுக்கு புகலிடம் பெற்றுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் பதாகைகளை ஏந்தியிருந்தனர்.
இதில் புகலிடக் கோரிக்கையாளர்களின் சிறு குழந்தைகள் பாடசாலைக் கல்வியை பெறுவதற்கான ஏற்பாடுகள் இதுவரை செய்து கொடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் ஊடகங்களிடம் கருத்து வௌியிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan
