போதும் இனி, நாட்டை மீட்க ஒன்றிணைவோம்! பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச
போதும் இனி, நாட்டை மீட்டு எடுக்க அனைவரும் ஒன்றிணைவோம் என பிரபல பாடகி உமாரியா சிங்கவன்ச தெரிவித்துள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவரது முகநூல் பதிவில் மேலும், பணி நிமித்தம் நான் வெளிநாடு வந்துள்ளேன், எனினும் என் இதயம் இலங்கையில் இருக்கின்றது. பாடல் பாடினாலும் நல்ல மனநிலையில் இல்லை…
சில மாதங்களாக நாம் அதிருப்தி அடைந்துள்ளோம். இலங்கையில் அப்பாவி மக்கள் சாப்பிட இன்றி, மின்சாரம் இன்றி, தங்களது பிள்ளைகளுக்கு பால் வழங்க முடியாது தங்களது குடும்பங்களுக்காக வீதிகளில் அலைந்து திரிகின்றனர்.
இது சரியா?
எங்களது நாட்டைப் போன்று வளங்கள், கலாச்சாரம், பூகோள அமைவிடம், விருந்தோம்பல் மற்றும் உணவு பானங்களில் செழிப்பான நாடு வேறு எங்கிலும் உண்டா?
இந்த நாட்டு மக்கள் அதிகம் துன்பப்பட்டுள்ளனர் நாம் ஒன்றாக இணையாவிட்டால் இதிலிருந்து வெளியே வர முடியாது.
எந்த நாளும் ஏதேனும் சாக்கு போக்கு கேட்டுக்கொண்டிருக்க முடியுமா?
மக்களின் எதிர்ப்பு போராட்டம் அமைதியானது, கடும்போக்குவாதமானதல்ல என்பதனை நிரூபிக்க நான் எனது மேடைகளை பயன்படுத்துவேன்.
நாட்டில் அப்பாவி பட்டினியால் வாடும் மக்களின் குரலே இதுவாகும். இது எங்களின் உரிமையாகும்.
இலங்கையர்கள் என்ற வகையில் நாம் நிறைய துன்பங்களை அனுபவித்துள்ளோம். இது போதும். நாட்டை மீட்டு எடுப்போம்! என தெரிவிக்கப்பட்டுள்ளது.






யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 20 மணி நேரம் முன்

நெருக்கமானவர் உடன் Vacation சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

எதிர்நீச்சல் சீரியல் இயக்குநர் திருச்செல்வம் மனைவியை பார்த்துள்ளீர்களா.. புகைப்படத்துடன் இதோ பாருங்க Cineulagam
