“மோதல்களில் உக்ரைன் வீரர்கள் பலி" ரஸ்யாவுக்கு மேற்கத்தைய நாடுகள் கடும் எச்சரிக்கை! (வீடியோ)
உக்ரைனை ஆக்கிரமித்தால் ரஸ்யா பாரிய விளைவுகளை சந்திக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஜேர்மனியின் மியூனிக்; நகரில் இடம்பெற்ற பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், ரஸ்யா, யுக்ரெய்ன் மீது படையெடுத்தால், விரைவான கடுமையான விளைவுகளை அது சந்;திக்கும் என்று எச்சரித்தார்.
ரஸ்யாவுடனான முறுகல், ஐரோப்பிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
யுக்ரெய்ன் மீது ரஸ்யா படையெடுத்தால், அந்த நாட்டின் பொருளாதார மற்றும் நிதித்தொடர்பான விடயங்களில் இலக்கு வைக்கப்படும்.
அத்துடன் ரஸ்யாவின் பொருளாதார, ஏற்றுமதி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்றும் கமலா ஹாரிஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை யுக்ரெய்னை ரஸ்யா ஆக்கிரமித்தால், அதன் அதிர்ச்சி உலகம் முழுவதும் எதிரொலிக்கும் என்று இங்;கிலாந்து தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இதனை குறிப்பிட்டுள்ளார்..
மியூனிக் பாதுகாப்பு மாநாட்டில் உரையாற்றிய அவர், ரஸ்யாவின் பொருளாதார திட்டங்கள் தடை செய்யப்படும். அதேநேரம் யுக்ரெய்னை பாதுகாக்க இராணுவத்திட்டங்களையும் இங்கிலாந்து முன்னெடுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்
ராஜதந்திரம் மற்றும் கலந்துரையாடலுக்கு இன்னும் இடமிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில் யுக்ரெய்னில் உள்ள ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் கிழக்குப் பிரதேசங்களில் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆத்திரமூட்டல்களுக்கு தமது நாடு பொறுப்பல்ல என யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ரஸ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிராக யுக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் என்று உலகத் தலைவர்களிடம் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

யுக்ரைன் ராணுவத்திற்கும் ரஸ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே மூன்றாவது நாளாக நடந்த மோதலில் இரண்டு யுக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்ட நிலையிலேயே ஜனாதிபதியின் கருத்து வெளியாகியுள்ளது.
மியூனிக்கில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பேசிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, யுக்ரேனியர்கள் "பீதி அடையவில்லை என்று குறிப்பிட்டார். ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தனது நாட்டை விட்டு வெளியேறுவது பாதுகாப்பற்றது என்று அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்த போதிலும் அவர் முனிச் மாநாட்டுக்கு சென்றிருந்தார்.
