ரஷ்யாவின் நகர்வு தொடர்பில் யுக்ரைன் ஜனாதிபதியின் நிலைப்பாடு
ரஷ்யாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு தமது நாடு பதிலளிக்காது எனவும் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு எதிராக யுக்ரைன் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் எனவும் யுக்ரைன் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கிழக்கில் ரஷ்ய ஆதரவுடைய கிளர்ச்சியாளர்களுடனான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில் அவர் இதனை கூறியுள்ளார்.
ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் யுக்ரைன் இராணுவத்தினருக்கும் இடையே மூன்றாவது நாளாக நடந்த மோதலில் இரு யுக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷ்யா யுக்ரைனை ஆக்கிரமிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நம்பிக்கை வெளியிடட நிலையிலும் மொஸ்கோ இதனை தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
கிழக்கு பிராந்தியங்களில் படையெடுப்பதற்குப் போலியான நெருக்கடியை ஏற்படுத்த ரஷ்யா முயற்சிப்பதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன.
எனினும் இவ்வாறான ரஷ்யாவின் நடவடிக்கையால் யுக்ரைனியர்கள் அச்சமடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.