ரஷ்யாவின் பீரங்கிகளால் நசுக்கப்பட்ட அப்பாவி உக்ரைன் மக்கள்
உக்ரைன் மீது ரஷ்யா 42ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல நகரங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையாக போராடி வருகிறது. ஆனால் உக்ரைன் படை வீரர்களும் அவர்களை எதிர்த்து சண்டையிடுகின்றனர்.
போர் உச்சகட்டதை எட்டியுள்ள நிலையில் புச்சா நகரை மீண்டும் உக்ரைன் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில், இந்த நகரை விட்டு ரஷ்யா வெளியேறுவதற்கு முன்பு பொது மக்கள் மீது அவர்கள் தனது கொடூர தாக்குதலை அரங்கேற்றியுள்ள தகவல் வெளியாகியிருக்கிறது.
அந்த நகரில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்கள் வீதிகளில் சிதறி, சிலரது உடல்கள் குப்பை தொட்டியில் வீசப்பட்டு இருந்ததாகவும் தகவல் வெளியானது.
பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்து உள்ளன. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தி உள்ளது.
இந்நிலையில்,அப்பாவி மக்கள் ரஷ்யாவின் பீரங்கிகளால் நசுக்கப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகினர் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐநா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவைப் போர் குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.