ரஷ்யா - உக்ரைன் விவகாரம்! - தொலைக்காட்சி நேரலையில் முகத்தில் குத்திய ஊடகவியலாளர் (Video)
உக்ரைனில் நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஷ்ய சார்பு அரசியல்வாதி ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதியின் செயலை கண்டிக்காத அரசியல்வாதி மீது கோபம் கொண்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது. எல்லையில் இரு நாட்டு இராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆதரவாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.