தீவிரமடையும் போர் பதற்றம்! ஆயுதங்களை தேடி நேரடியாக பிரித்தானியாவிற்கே சென்ற ஜெலென்ஸ்கி
இம்மாத இறுதியில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ரஷ்யாவிற்கு எதிராக ஆயுதங்களை தேடி திடீரென பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.
ரஷ்யா, உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் முதல் முறையாக உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி பிரித்தானியாவிற்கு சென்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து, உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கான ஆயுத விநியோகம்
இதனை தொடர்ந்து உக்ரைனுக்கான உடனடி ஆயுத விநியோகத்தை பிரித்தானியா அறிவித்துள்ளதுடன், உக்ரைனிய விமானிகளுக்கு பயிற்சியளிக்கவும் உறுதியளித்துள்ளது.
இதன்போது ரஷ்ய படையெடுப்பின் முதல் நாட்களிலிருந்து உக்ரைனுக்கு பிரித்தானியா வழங்கி வரும் ஆதரவிற்கு ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஜெலென்ஸ்கி மன்னர் சார்லஸை சந்திப்பார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.