உக்ரைன் - ரஷ்யா போரில் உலக குத்துசண்டை சாம்பியன் உயிரிழப்பு
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் உலக குத்துசண்டை வீரரான மாக்சிம் காகல்(30) உயிரிழந்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனியர்கள் ரஷ்ய தாக்குதலை எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நாட்டின் முக்கிய துறைமுக பகுதியான மரியுபோல் நகரை பாதுகாக்கும் முயற்சியில் உக்ரைனின் அசோவ் சிறப்புப் படை பிரிவுடன் இணைந்து அந்த நாட்டின் பிரபல குத்துசண்டை சாம்பியன் மாக்சிம் காகல்(30) ஈடுபட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து, கடந்த 25ம் திகதி மரியுபோல் நகரில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், உக்ரைனின் அசோவ் சிறப்புப் படை பிரிவுடன் இணைத்து போராடி வந்த பிரபல குத்துசண்டை வீரர் மாக்சிம் காகல்(30) உயிரிழந்துள்ளார்.
கிரெமென்சுக்(Kremenchug) பகுதியில் இருந்து முதன் முதலில் உருவாகிய உலக குத்துசண்டை சாம்பியன் மற்றும் உக்ரைன் குத்துசண்டை அணியின் ஆடவர் பிரிவின் முதல் உலக குத்துசண்டை சாம்பியன் மாக்சிம் காகல் ஆவார்.