ரஷ்யாவுக்குள் அதிரடியாக ஊடுறுவிய உக்ரைன் போர் விமானங்கள்
உக்ரைன் போர் விமானங்களும், பாதுகாப்பு வாகனங்களும் ரஷ்யாவுக்குள் நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பிலான காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாக வெளியாகிவருகின்றன.
ரஷ்யாவுக்குள் உக்ரைன் படைகள் 15 கிலோமீட்டர் தொலைவு வரை வந்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட தாக்குதல்
உக்ரைன் 300 படைவீரர்களையும், 11 பாதுகாப்பு வாகனங்களையும், 20 கவச தாக்குதல் வாகனங்களையும் வடகிழக்கு எல்லையைத் தாண்டி ரஷ்யாவுக்குள் அனுப்பியுள்ளதாக ரஷ்ய இராணுவமும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மார்ச் மாதத்தில், உக்ரைன் ஆதரவு போராட்டக்காரர்கள் நீண்ட தாக்குதல் நிகழ்த்திய பகுதி இதுதான். இதற்கிடையில், உக்ரைன் படைவீரர்கள், குர்ஸ்க் (Kursk) அணு உலையை கைப்பற்றக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Kursk region, Russia ❗
— LX (@LXSummer1) August 6, 2024
Destroyed russian equipment ?
According to a Z-channel: "The enemy has declared the destruction of our reserves, which were being transferred to the border in the Kursk region. The sad thing is that the equipment was destroyed while still on the trawls… pic.twitter.com/CwCg64wMUo
இவ்வாறு அந்த அணு உலையை உக்ரைன் படைவீரர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, உக்ரைனுக்குச் சொந்தமான ஜாபோரிஜியா ( Zaporizhzhia)அணு உலையை தங்களிடம் ஒப்படைக்குமாறு மிரட்டலாம் (nuclear blackmail) என புடினுக்கு அச்சம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |