உக்ரைன் - ரஷ்யா போர் தொடர்பில் உக்ரைன் இராணுவ மேஜரின் தகவல்
2022ஆம் ஆண்டு முடிவதற்குள் உக்ரைன் - ரஷ்யா இடையே ஏற்பட்டுள்ள போர் முடிவுக்கு வரும் என உக்ரைன் இராணுவ மேஜர் ஜெனரல் கைரிலோ புடானோவ் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகமொன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே இதனைக் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை வீழ்த்த சதி நடக்கின்றது. இந்த ஆண்டு இறுதிக்குள் போர் முடிவுக்கு வரும்.
இந்த போரில் ரஷ்யா தோல்வி அடைந்தால், ஜனாதிபதி பதவியிலிருந்து புடின் அகற்றப்படுவார். இதன் மூலம் ரஷ்யா வீழ்ச்சி அடையும்.
புடின் மிகவும் மோசமான உளவியல் மற்றும் உடல் நிலை பாதிப்பில் இருக்கின்றார்” என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், ரஷ்யாவிற்கு எதிராக போரினை முன்னெடுக்க உக்ரைனுக்கு இராணுவ உதவி வழங்கப்படும் என நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.