புடினுடன் நேருக்கு நேர் பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன்
இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் சமாதான பேச்சுவார்த்தையில் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்துக்கொள்வாராக இருந்தால் தானும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
எனினும், இஸ்தான்புல்லில் நடைபெறவிருக்கும் குறித்த பேச்சுவார்த்தையில் புடின் பங்கேற்பாரா என்பதை கிரெம்ளின் மாளிகை இதுவரை அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தையானது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமைதி முயற்சிகளின் முக்கிய மையமாக மாறியுள்ளது.
அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை
அமெரிக்கா சார்பில் இந்த பேச்சுவார்த்தைக்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவை அனுப்புவதாகக் கூறியதோடு, கலந்து கொள்ளவும் முன்வந்துள்ளார்.
மேலும், ட்ரம்பின் மூத்த தூதர்களான ஸ்டீவ் விட்காஃப் மற்றும் கீத் கெல்லாக் ஆகியோரும் இதில் கலந்துக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு படியாக நிபந்தனையற்ற 30 நாள் போர்நிறுத்தத்தைப் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும், "ரஷ்யாவில் உள்ள அனைத்தும்" அவரைச் சார்ந்திருப்பதால் புடின் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க வேண்டும் என்றும் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.
போரின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை நாங்கள் உடன்பட விரும்புகிறோம், என்றும் ஜெலென்ஸ்கி விளக்கமளித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 11 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam
