அதிகாலையில் நடந்த திடீர் தாக்குதல்: ரஷ்ய ட்ரோன்களை சிதர செய்த உக்ரைன்
உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்த 24இற்கும் அதிகமான ரஷ்ய ஆளில்லா வான்கலங்களை(drones) சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
ஆளில்லா வான்கலங்களை கொண்ட தாக்குதலானது நேற்று(10.09.2023) அதிகாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
அதேவேளை போட்டித் தாக்குதல்களால் ஏற்பட்ட சேத விபரம் தெளிவாகத் தெரியவில்லை என இருதரப்பும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா வான்கலங்களின் இடிபாடுகள் டார்னிட்ஸ்கி, சோலோமியன்ஸ்கி, ஷெவ்சென்கிவ்ஸ்கி, ஸ்வியாடோஷின்ஸ்கி மற்றும் போடில் மாவட்டங்கள் மீது விழுந்ததாக நகர இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சனல் 4 வெளிப்படுத்தியிருக்கும் புதிய தகவல்கள்: பிரதான சூத்திரதாரிகள் யார் என்பது அம்பலம் - ஹக்கீம் தகவல்
உக்ரைனால் ஏவப்பட்ட ஆளில்லா வான்கலங்கள்
ஆளில்லா வான்கலங்கள் வெவ்வேறு திசைகளிலிருந்தும் தலைநகருக்குள் நுழைந்துள்ளது.
மேலும் வான் பாதுகாப்புப் படைகள் 24இற்கும் அதிகமான ஆளில்லா வான்கலங்களை தாக்கி அழித்ததாகவும் கீவ்வில் குறைந்தது 10 குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்கள் குறித்து ரஷ்யாவிடம் இருந்து உடனடியாக எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், கிரிமிய தீபகற்பத்திற்கு அருகிலுள்ள கருங்கடலில் உக்ரைனால் ஏவப்பட்ட எட்டு ஆளில்லா வான்கலங்களை வான் பாதுகாப்பு கட்டமைப்பு அழித்ததாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |