ரஷ்யாவுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன் சிறப்பு படை
உக்ரைன் - ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 9 ஆவது நாளாக நீடித்து வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷ்ய இராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கிய ரஷ்யாவின் முக்கிய இராணுவ தளபதி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகரை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியுள்ள Major General Andrei Sukhovetsky, கீவ் நகருக்கு வெளியே சுமார் 30 மைல்களுக்கு தொலைவில் அமைந்துள்ள விமானத்தளத்தில் உக்ரைன் சிறப்புப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ தளபதி படுகொலை செய்யப்பட்டமை காரணமாகவே, கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்ய துருப்புகளின் நடவடிக்கைகள் பாதியில் கைவிடப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே கீவ் நகருக்கு புறப்பட்டு சென்ற 40 மைல்கள் தொலைவு இராணுவ தளவாடங்கள் சேற்றில் சிக்கிக்கொண்டதால் நகர முடியாமல் தாமதமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முக்கிய இராணுவ தளபதியின் இழப்பு, தளவாடங்கள் சேற்றில் சிக்கி தாமதமாவது என கடும் நெருக்கடியை ரஷ்ய துருப்புகள் எதிர்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் - ரஷ்ய போரில் இதுவரை 9,000 வீரர்கள் ரஷ்ய தரப்பில் கொல்லப்பட்டுள்ளதாகவும், உக்ரைன் தரப்பில் 2,000 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
you my like this video
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam