ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டிரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியுள்ளதாக விமானப்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா மேற்கொண்டு வரும் போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில் உக்ரைன் இதுவரை ஈரானில் தயாரிக்கப்பட்ட 300க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களை (டிரோன்கள்) சுட்டு வீழ்த்தியுள்ளதாக அந்நாட்டு விமானப்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி ஈரானில் தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான ஷாஹெட்-136 காமிகேஸ் டிரோன்களை கீவ் வீழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகள் தாக்கி அழிப்பு
இது தொடர்பான அறிவிப்பில், "ரஷ்யாவுடனான 6 மாதங்களுக்கு மேலான போரில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட ஈரானில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானங்களை தாக்கி அழித்துள்ளோம்.

இந்த ஆளில்லா விமானங்கள் ரஷ்யாவுக்கு முக்கியப் பங்காற்றியுள்ளன. உக்ரைனின் முக்கிய கட்டமைப்புகளை தாக்கி அழிப்பதற்கு இந்த ஆளில்லா விமானங்கள் உதவியுள்ளன" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே டிரோன்களை ரஷ்யாவுக்கு தங்கள் நாடு ஏற்றுமதி செய்கின்றமை தொடர்பான குற்றச்சாட்டை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri