அதிகரித்துள்ள போர் பதற்றம் : ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் வான்வழி தாக்குதல்
உக்ரைன் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் ரஷ்ய எண்ணெய் கிடங்குகள் பல எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது ரஷ்யாவுக்குள் சுமார் 125 மைல்கள் தொலைவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் தரப்பு தொடர்ந்து ரஷ்யாவுக்கு கடும் அழுத்தமளித்தும் வருகிற நிலையில், வெளியான தரவுகளின் அடிப்படையில், ரஷ்யாவின் ப்ரோலெடார்ஸ்க்( Proletarsk) டீசல் கிடங்குகள் மீதே தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிகாரிகள்
இதன் போது குறைந்தது ஐந்து காமிகேஸ் ட்ரோன்களை உக்ரைன் தாக்குதலில் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்த நிலையில், தீயணைப்பு தொடருந்து ஒன்றை அப்பகுதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
ஆரம்பத்தில் தாக்குதலை முறியடித்துள்ளதாகவே ரஷ்ய அதிகாரிகள் தரப்பு கூறியுள்ளனர். மேலும், வெடிச்சத்தம் என்பது ட்ரோன்கள் வெடித்ததால் ஏற்பட்டவை என்றும் தெரிவித்தனர்.
ஆனால் அதன் பின்னரே, எண்ணெய்க் கிடங்குகள் சேதப்படுத்தப்பட்ட தகவல் வெளியானது. இப்பகுதியில் இருந்தே இராணுவ வாகனங்களுக்கான எரிபொருள் அனுப்பப்படுகிறது. இதனால் இது திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றே கூறுகின்றனர்.
இரண்டாம் உலகப் போர்
இது விளாடிமிர் புடினின்(Vladimir Putin) போர் தந்திரங்களுக்கு கிடைத்த பேரிடியாகவே பார்க்கப்படுகிறது. இதனிடையே உக்ரைன் தரப்பு தொடர்ந்து ரஷ்யாவுக்குள் முன்னேறி வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், உக்ரைனில் ரஷ்யா கைப்பற்றியுள்ள பகுதிகளை விளாடிமிர் புடின் சொந்தம் கொண்டாட முடியாதவகையில் நெருக்கடி அளிக்கவே ஜெலெஸ்ன்கி ஊடுருவலை முன்னெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மட்டுமின்றி, இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ரஷ்யா மீது முன்னெடுக்கப்படும் மிகப்பெரிய தாக்குதல் என்று கூறப்படுகிறது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 29 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
