உக்ரைனுக்கு அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கை
ஓகஸ்ட் 24 ஆம் திகதி உக்ரைன் (Ukraine) சுதந்திர தினத்தை கொண்டாடவுள்ள நிலையில் ரஷ்யாவின் (Russia) தாக்குதல் குறித்து அமெரிக்கா (US) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதற்கமைய, உக்ரைனின் 33 ஆவது சுதந்திர தினத்தன்று நாடு முழுவதும் பயங்கர தாக்குதல்களை முன்னெடுக்க ரஷ்யா தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தையொட்டி உக்ரைனில் ஏற்பாட்டு நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
உக்ரைனின் சுதந்திர தினம்
இதன்படி, 24 ஆம் திகதி உக்ரைனின் எல்லா பகுதிகளிலும் பயங்கர ட்ரோன் தாக்குதல்களை மேற்கொள்ள ரஷ்யா தயாராகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் நாட்கள் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களில் ரஷ்யாவின் தாக்குதல் அதிகரிக்கலாம் எனவும், இதன்போது ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் மூலம் அதிகம் தாக்கப்படலாம் என எதிர்பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.
அதேவேளை, ரஷ்யாவின் படையெடுப்புக்கு பிறகு உக்ரைன் மக்களுக்கு சுதந்திர தினம் ஒரு முக்கிய நிகழ்வாக கருதப்படுகின்ற நிலையில், உக்ரைன் மேற்னொண்ட அனைத்து தாக்குதலுக்கும் இந்நேரங்களில் பதிலளிக்கப்படும் என விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.





Ethirneechal: கல்யாண மண்டபத்திற்கு வந்த பார்கவி.. அடுத்த உயிரை காவு வாங்க காத்திருக்கும் அறிவுக்கரசி- கதிர் Manithan

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri
