ரஷ்ய தாக்குதலின் எதிரொலி : திடீர் பதவி விலகலை அறிவித்த உக்ரைன் அமைச்சர்
உக்ரைன் (Ukraine) வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா (Dmytro Kuleba) திடீரென நேற்று(04) பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
ரஷ்யாவுக்கு எதிராக போர் நடைபெற்று வரும் நிலையில், முக்கிய அமைச்சர் பதவி விலகல் செய்துள்ளமையானது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 முக்கிய அமைச்சர்கள்
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை.
இந்நிலையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கி வருவதால் ரஷ்யாவின் தாக்குதலை எதிர்கொண்டு வருகிறது.
ரஷ்யாவில் உள்ள குர்ஸ்க் மாகாணத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பிடித்துவைத்து, ரஷ்யாவின் திட்டத்தை முறியடிக்க உக்ரைன் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 4 முக்கிய அமைச்சர்கள் பதவி விலகல் செய்துள்ளனர்.
ஐரோப்பிய விவகாரங்களுக்கான துணை பிரதமர் ஒல்கா ஸ்டெபானிஷினா, தொழில்துறை மூலோபாய அமைச்சர் ஒலெக்சாண்ட்ர் கமிஷின், நீதித்துறை அமைச்சர் டெனிஸ் மலியுஸ்கா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ருஸ்லான் ஸ்ரிலெட்ஸ் ஆகிய 4 பேர் தங்கள் பதவியை பதவி விலகல் செய்தனர்.
அமைச்சரவை மாற்றம் இருக்கும் என கடந்த வாரம் குறிப்பிட்டிருந்த உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி. நாடாளுமன்றத்திற்கான அந்தக் கட்சியின் தலைவர், தற்போது இருக்கும் அமைச்சர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மாற்றப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri
