Z என்ற எழுத்தை புறக்கணிக்கும் புட்டினுக்கு எதிரானவர்கள்!
Z என்ற எழுத்து உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு ஆதரவான சின்னமாக மாறியுள்ளது,
இந்தநிலையில் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பிறரால் இந்த எழுத்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.
மத்திய நகரமான டியூமனில் உள்ள ஒரு மண்டபத்தில் போர் எதிர்ப்பு ரொக்; இசைக்குழு நிகழ்ச்சி ஒன்றை நடத்தத் திட்டமிடப்பட்டது.
எனினும் Z என்ற எழுத்து குறித்த மேடையில் குறிக்கப்பட்டிருந்தமையால், போருக்கு எதிராகவும் விளாடிமிர் புடினுக்கும் எதிராக பலமுறை பேசிவரும் குழுவின் முன்னணி பாடகர் யூரி ஷெவ்சுக் அந்த மேடையில் நிகழ்ச்சியை நடத்த மறுத்துவிட்டார்
இதனையடுத்து மற்றும் ஒரு மேடையை தேர்தெடுத்தபோதும், அந்த மேடையில் நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கப்படவில்லை என்றும் முன்னணி பாடகர் யூரி ஷெவ்சுக் தெரிவித்துள்ளார்.
Z என்ற எழுத்துக்கு பல அர்த்தங்கள் கூறப்பட்டாலும், உக்ரைன் படையெடுப்புக்கு முன்னதாக கிழக்கு உக்ரைன் பிராந்தியங்களை சுயாதீன பிராந்தியங்களாக ரஸ்யா அங்கீகரித்த தினமான 22.02.2022 என்பதை குறிக்கும் 2 என்ற எண்ணே பின்னர் Z ஆக மாற்றப்பட்டது என்று கூறப்படுகிறது.
அதேநேரம் உக்ரைனுக்கும் செல்லும் வழி Z போன்ற அமைந்திருப்பதாலும் அந்த எழுத்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.