பேச்சுவார்த்தைக்கு மத்தியிலும் உக்ரைனில் ஓயாத சைரன் சத்தம்! பலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல்
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோருக்கிடையில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையிலும், உக்ரைனின் சில பகுதிகளில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கைகள் ஒலிக்க விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யா, பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் உக்ரைனின் விமானப்படை எச்சரித்துள்ளது.
ஜெலன்ஸ்கியின் நன்றி
இது ஒரு புறமிருக்க, வெள்ளை மாளிகையில் டொனால்ட் ட்ரம்புடன் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் உக்ரைன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றனர்.
சமாதான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதோடு அது செயற்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதன்போது, டொனால்ட் ட்ரம்புக்கு ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





கூலி படத்தில் தரமான நடித்து அசத்திய சௌபின் இப்படத்திற்காக வாங்கிய சம்பளம்.. எத்தனை கோடி தெரியுமா? Cineulagam

பசங்க பட நடிகர் ஜீவாவா இது, இப்போது அவர் ஒரு பிரபல கம்பெனியின் CEO... இந்த விஷயம் தெரியுமா? Cineulagam
