உக்ரைன் - ரஷ்யா யுத்தத்தில் ஏற்பட்டுள்ள திடீர் திருப்பம்! ரஷ்யாவிடம் ஆள்பலம் இல்லை: வெளியான தகவல்
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வரும் நிலையில் உக்ரைன் தலைநகர் கீவை கைப்பற்றுவதற்கான ஆள்பலம் ரஷ்யாவிடம் இல்லை என அமெரிக்க செனட்டரும், செனட் புலனாய்வுக் குழுவின் துணைத் தலைவருமான மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன்-ரஷ்யா இடையிலான இன்று 19நாட்களாகத் தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்யப் படையினர் நெருங்குவதாகவும், நகரைச் சுற்றி வளைத்துவிட்டதாகவும் தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தது.
இதனால் கீவ்வை ரஷ்யா கைப்பற்றிவிடுமா என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு கோரியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், ரஷ்யப் படைகளுக்கு மன வலிமையும் இல்லை. இதன் மூலம் உக்ரைன் கை ஓங்குவதாகவே பார்க்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தலைநகரைக் கைப்பற்ற ரஷ்யா வெகுநாட்களாகவே முயன்று வரும் நிலையில், இந்த
தகவலை மார்கோ வெளியிட்டுள்ளது முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.