உக்ரைனுக்கு ரஷ்யா கொடுத்த பலத்த அடி.. அதிகரிக்கும் போர்பதற்றம்
ரஷ்ய தாக்குதல்களின் போது, உக்ரைனின் கியேவில் உள்ள முக்கிய அரசாங்கக் கட்டிடம் முதன்முறையாக போரில் தாக்கப்பட்டதாக உக்ரைன் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கட்டிடத்தின் கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்துள்ளதாகவும், ரஷ்ய தாக்குதலின் காரணமாக தீப்பிடித்ததாகவும் யூலியா ஸ்வைரிடென்கோ கூறினார்.
உக்ரைனின் விமானப்படை, ரஷ்யாவால் அண்மைய தாக்குதலில் சாதனை எண்ணிக்கையிலான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அறிவித்தது.
கடுமையான தாக்குதல்கள்
விமானப்படையின் கூற்றுப்படி, ஒன்பது ஏவுகணைகள் மற்றும் 56 ட்ரோன்கள் 37 இடங்களைத் தாக்கியதாக கூறப்படுகின்றது. மேலும் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தின் இடிபாடுகள் எட்டு இடங்களில் விழுந்தன.
இந்த தாக்குதலால் சபோரிஜியா, கிரிவி ரி மற்றும் ஒடேசா நகரங்களிலும், சுமி மற்றும் செர்னிஹிவ் பகுதிகளிலும் சேதம் ஏற்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார்.
"உண்மையான இராஜதந்திரம் நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கியிருக்கக்கூடிய நேரத்தில், இப்போது இதுபோன்ற தாக்குதல்கள் வேண்டுமென்றே செய்யப்பட்ட குற்றமாகும்.
அரசியல் விருப்பம்
மேலும் போரை நீடிப்பதற்கான முயற்சியாகும்" என்று ஜெலென்ஸ்கி சமூக ஊடகங்களில் கூறியதுடன் தாக்குதல்களை நிறுத்த உலகத்தின் அரசியல் விருப்பத்தை வலியுறுத்தினார்.
உக்ரைனின் இராணுவ- தொழில்துறை வளாகம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு மீது தாக்குதல்களை நடத்தியதாகவும், ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணக் கிடங்குகளுக்கு சேதம் விளைவித்ததாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது போர்நிறுத்த தருவாயில் இருக்கும் இரண்டு நாடுகளிடையேயும் மீண்டும் போரை அதிகரிக்கும் நடவடிக்கை என சர்வதேச நாடுகள் கண்டனம் வெளியிட்டு வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




