மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்!
கிழக்கிலங்கையின் சின்னக்கதிர்காமம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு மண்டூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் இன்று(07) தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ மூங்கிலாற்று சங்கமத்தில் நடைபெற்றது.
இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் கிழக்கிழங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த மாதம் 18.08.2025 அன்று இரவு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
கொடியேற்றம்
இருபது தினங்கள் நடைபெற்ற இந்த மஹோற்சவத்தில் தினமும் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று முருகப்பெருமானின் வெளி வீதி உலா நடைபெற்றது.
பாரம்பரிய பூசை முறைகளுடன் பாரம்பரியமான முறையிலேயே ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர்.
தீர்த்த உற்சவத்தினை தொடர்ந்து வேல்தாங்கிய பேழை ஊர்வலமாக ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்ட போது அங்கு சிறுமிகள் ஆரார்த்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
வரலாறு
இலங்கையின் வரலாற்று பதிகளில் ஒன்றான மண்டூர் கந்தசுவாமி ஆலயம் கந்தபுராணத்து காலத்தில் உருவான ஆலயமாக கருதப்படுகின்றது.
முருகப்பெருமானுக்கும் சூர பத்மனுக்கும் இடையில் உண்டான போரின் போது முருகப்பெருமான் வீசிய வேல் ஆறு கூறுகளாக பிரிந்து சென்று சூரனை வதம் செய்ததாகவும் அவற்றில் ஒருவேல் கதிர்காமத்திலும், ஒரு வேல் மண்டூரிலும் தங்கியதாக கர்ண பரம்பரைக் கதைகள் தெரிவிக்கின்றன.
அதேபோன்ற சோழ பரம்பரையில் வந்த சீர்பாததேவியினால் கொண்டுவரப்பட்ட வேலை அவருடன் வந்த ஒருவர் எடுத்து வந்து இங்கு ஒழித்து வைத்து அதனை வேடர்கள் கண்டு வழிபட்டதாகவும் கூறப்படுகின்றது.
கதிர்காம ஆலயத்தின் பூஜை முறைகளுக்கு ஒப்பானதாக நடைபெறும் இந்த ஆலயத்தின் உற்சவமும் கப்புகர்களினால் வாய்கட்டப்பட்டு உற்சவம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.













ரஷ்ய எண்ணெய் விவகாரம்... அமெரிக்காவை அடுத்து இந்தியாவிற்கு எதிராக திரும்பும் ஐரோப்பிய நாடுகள் News Lankasri

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
