முதுகில் குத்திய இராணுவம்: மூத்த ரஷ்ய அதிகாரியின் பகிரங்க தகவல்(Video)
உக்ரைனுக்கு எதிரான போர் வலுப்பெற்று வரும் நிலையில் ரஷ்ய இராணுவத்தின் மூத்த இராணுவ அதிகாரியான ஜெனரல் ஹீவன் ஹோபா பதவிக்கும் செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த செய்தியை உறுதி செய்யும் நோக்கில் ஹீவன் ஹோபா " ரஷ்ய இராணுவம் தன் முதுகில் குத்தி விட்டது" என சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்தார்.
உக்ரைனுக்கெதிரான தாக்குதல்களில் முக்கிய களமுனைகளில் தலைமை தாங்கிய அதிகாரியாக ஹீவன் ஹோபா கருதப்படுகிறார்.
ரஷ்ய இராணுவத்தின் செயற்பாடுகள் குறித்து குற்றம் சுமத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாகவே தான் பதவிநீக்கம் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
எனினும், குறித்த பதவிநீக்கம் தொடர்பில் ரஷ்ய இராணுவத்தரப்பில் இருந்து எவ்வித செய்திகளும் வெளிவரவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் விடயங்களை இன்றைய செய்திவீச்சு நிகழ்ச்சியில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |