கொன்று குவிக்கப்படும் ரஷ்ய வீரர்கள்! புடினிற்கு பேரிடியாக மாறிய காணொளி
உக்ரைன் போர்க்களத்தில் இருந்து தப்பி ஓட முயற்சிக்கும் சக வீரர்களை ரஷ்ய இராணுவத்தினர் கொன்று குவிப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பான காணொளி ஒன்றை உக்ரைன் ட்ரோன் விமானம் ஒன்று பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தப்பிக்க முயற்சிக்கும் வீரர்கள்
அந்த காணொளியானது 14 நொடிகள் மட்டும் பதிவாகியுள்ளதாகவும் டெலிகிராம் சமூக ஊடகம் ஒன்றில் முதலில் வெளியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த காணொளியானது ட்ரோன் விமானத்தால் பதிவு செய்யப்பட்டது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய குறைந்தது 7 ரஷ்ய வீரர்கள் உயிருக்கு பயந்து புதர்களுக்கு நடுவே ஓடி ஒழியும் காட்சிகள் அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
சிலர் தலைக்கவசம் ஏதுமின்றி காணப்படுவதுடன் ஆயுததாரிகளான மூன்று வீரர்கள் புதர்கள் நடுவில் இருந்து வெளியே வருகின்றனர்.
காணொளி காட்சி விபரம்

இந்த ஆயுததாரிகள், போர்க்களத்தில் இருந்து வெளியேறும் வீரர்களை தடுத்து நிறுத்த ரஷ்ய இராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்கள் என்றே கூறுகின்றனர்.
தப்பி செல்ல முயற்சிக்கும் வீரர்களை கொல்லவும் இவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது என்றே உக்ரைன் தரப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த ஆயுததாரிகள் எச்சரிக்கை அளிக்கும் வகையில் துப்பாக்கியால் வான் நோக்கி சுட்டுள்ளனர்.
பின்னர் அந்த வீரர்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர்.
இதனையடுத்து அந்த 7 ரஷ்ய வீரர்களையும் நெருங்கி, அவர்கள் இறந்து விட்டார்களா என சோதனைக்கு உட்படுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அனிருத் - காவ்யா மாறன் திருமணத்தில் CM விஜய் மற்றும் MK ஸ்டாலின்.. பத்திரிகை வைத்த கலாநிதி மாறன் Cineulagam
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri