உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் என்னால் நிறுத்த முடியும்! முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் பகிரங்க அறிவிப்பு
இப்போது நான் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைன் போரை 24 மணிநேரத்தில் நிறுத்தியிருப்பேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்பில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போர்
புதிய கொள்கை குறித்த வீடியோவில் அவர் கூறுகையில்,“உக்ரைன் போரில் டாங்கிகளை அனுப்புவதன் மூலம் அணுசக்தி போரை பைடன் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளார்.

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ரஷ்யா - உக்ரைன் போர் ஒருபோதும் நடந்திருக்காது.
ஆனால் இப்போது கூட நான் ஜனாதிபதியாக இருந்தால், இந்த பயங்கரமான மற்றும் வேகமாக அதிகரித்து வரும் போரை 24 மணி நேரத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருவதற்கு என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
ஜோ பைடனை கண்டித்த டிரம்ப்
நீங்கள் சரியான விடயங்களை சொல்வதற்கு பதிலாக தவறான விடயங்களை சொல்லக் கூடாது.

ரஷ்யாவைப் போருக்கு அழைத்துச் செல்ல நாங்கள் உதவினோம் என்று நான் நினைக்கிறேன்.”என கூறியுள்ளார்.
தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் இந்த போரை கையாண்ட விதத்தை டிரம்ப் பலமுறை கண்டித்துள்ளார்.
இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் ஜனாதிபதி பைடனை குறிப்பிட்டு உக்ரைன் போர் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
குணசேகரன் பிளானுக்கு இடையில் அறிவுக்கரசி செய்த பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் ஸ்டார்லிங்க் மூலம் இணைய சேவை வழங்கிய இளைஞர்: அந்நாட்டு பொலிஸார் அதிரடி நடவடிக்கை News Lankasri