உக்கிரமடையும் போர்க்களம்; உக்ரைனில் இங்கிலாந்தின் சிறப்பு விமான சேவையினர் (Video)
மேற்கு லிவிவ் பிராந்தியத்தில் உக்ரேனிய இராணுவத்திற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த நாசவேலை நிபுணர்கள் உதவுவதாக ரஷ்ய அரச ஊடகம் கூறுகிறது.
எஸ்ஏஎஸ் என்ற சிறப்பு விமான சேவை குழுவில் இலிருந்து குறைந்தபட்சம் இரண்டு குழுக்கள் - அல்லது மொத்தம் சுமார் 20 பேர் இதற்காக பணியமர்த்தப்பட்டுள்ளதாக ரஸ்ய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
இவர்கள் சாதாரண சிறப்புப் படைகள் அல்ல என்று ரஷ்ய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்த பணியாளர்கள் ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரைனிய தளபதிகளின் கூற்றுப்படி, இங்கிலாந்தின் சிறப்பு துருப்புக்கள் உள்ளூர் படைகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக கடந்த வாரம் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இரண்டாம் உலகப் போரின் போது நிறுவப்பட்ட இங்கிலாந்தின் சிறப்பு விமான சேவை, பணயக்கைதிகள் மீட்பு, உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட இரகசிய பணிகளுக்கு பெயர் பெற்ற படையாகும்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
