உக்ரைன் ரஷ்யா போர்: 21,200க்கும் மேற்பட்ட ரஷ்ய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்
ரஷ்யா - உக்ரைன் இடையே யுத்தம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 21,200க்கும் மேற்பட்ட ரஷ்யத் துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இதன்போது ரஷ்யாவின் 2,162 இராணுவ வாகனங்கள், 838 பீரங்கிகள், 176 போர் விமானங்கள், 153 ஹெலிகொப்டர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. மேலும் 1,523 வாகனங்கள் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆண்டனிட்யோ குட்டரெஸ் அடுத்த வாரம் ரஷ்யாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கிரெம்ளின் உறுதிப்படுத்தியுள்ளது.
இவர்களின் சந்திப்பு எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதுடன் அச் சந்திப்பின்போது ஆண்டனிட்யோ குட்டரெஸ், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செரகே லாவ்ரோஃபுடன் மதிய உணவு அருந்தவும் திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.