முற்றுகையிடப்பட்டுள்ள உக்ரைனின் துறைமுக நகரம்: தொடரும் தாக்குதலால் சிதையும் மரியுபோல்
உக்ரைனின் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்ய துருப்புகள் மொத்தமாக முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மரியுபோல் நகரம் மொத்தமாக சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டடங்களில் இருந்து இதுவரை சிலரை மீட்க முடியவில்லை என கூறப்படுகிறது.
உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாக களமிறங்கிய ரஷ்ய துருப்புகள் 24 நாட்களாக போரிட்டு வருகின்றனர். வரைபடத்தில் இருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம்.
இதனை தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து, ரஷ்ய தாக்குதலில் சிக்கி பலியானவர்களை இதுவரை மீட்க முடியாமல் உறவினர்களும் அதிகாரிகளும் தவித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக சுமார் 400,000 மக்கள் வெளியேற முடியாமல் சிக்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மின்சாரம், தண்ணீர், உணவு என அடிப்படை தேவைகள் அனைத்தும் துண்டிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, மரியுபோல் நகரில் தாக்குதலை தீவிரப்படுத்த இருப்பதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam
