கூட்டு ஆலோசனையில் ரஷ்ய தளபதிகள்! உக்ரைனுக்கு காத்திருக்கும் பேரிடி
அண்மைக்காலமாக அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் உக்ரைன்-ரஷ்யா தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில் ரஷ்ய தளபதிகள் உக்ரைனில் அணு ஆயுத பயன்பாடு தொடர்பில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
கூட்டு ஆலோசனை
விளாடிமிர் புடினின் ரஷ்ய துருப்புகள்,உக்ரைனில் தொடர்ந்து கடும் பின்னடைவை எதிர்கொண்டு வருகிறன.

இதனால் விரக்தியடைந்துள்ள ரஷ்ய தளபதிகள் எங்கே எப்போது அணு ஆயுதம் பயன்படுத்தலாம் என்பது தொடர்பில் கூட்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஆனால் இந்த ஆலோசனைகளில் ஜனாதிபதி புடின் பங்கேற்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையாக இருக்கவே அதிக வாய்ப்பு காணப்படுவதாக குறிப்பிட்டுள்ள தேசிய பாதுகாப்பு கவுன்சில் அதிகாரி, நாம் இந்த தகவலை உதாசீனப்படுத்தக் கூடாது எனவும் ரஷ்யாவின் நகர்வுகளை துல்லியமாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்களின் குவியல்

ரஷ்யாவிடம் மொத்தம் 6,000 அணு ஆயுதங்களின் குவியல் இருப்பதாகவே கூறப்படுகிறது.
இதனால் உலகம் மொத்தமும் 200 முதல் 300 மில்லியன் மக்கள் பாதிப்படையலாம் என கூறப்படுகின்றது.
மேலும், போருக்கு பயன்படுத்தக்கூடிய 2,000 அணு ஆயுதங்களும் ரஷ்யா உருவாக்கி வைத்துள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படியான அணு ஆயுதத்தில் மிக சிறிய ஒன்றை பயன்படுத்தினாலும் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதுடன், பல ஆண்டுகளுக்கு அப்பகுதி வாழ முடியாததாகிவிடும்.
உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமானால், அது கடந்த 70 ஆண்டுகளில் முதன்முறை என்றே கூறப்படுகின்றது.
புதன் உருவாகும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
அமெரிக்கா ராணுவத்தில் களமிறங்கிய மாயாவி..! பென்டகன் கையிலெடுத்த Project Maven AI திட்டம் News Lankasri
ஈரானால் லண்டனுக்கும் அச்சுறுத்தல்... ஏவுகணைகளைத் தடுக்கும் பாதுகாப்பு அமைப்பு இல்லாத பிரித்தானியா News Lankasri
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri